ஒரு நொடி க(வி)தை

இரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில் வானத்தை ரசித்தேன்.

தேய்பிறையா வளர்பிறையா?

நட்சத்திரங்கள் நகர்ந்தனவா?

தெரியவில்லை...

அருந்ததியை தேடித் தலைத் திருப்பினேன்.


தண்டவாளத்தின் தகடு தலையில் இடித்தது.

ஒரு நொடி க(வி)தை

தனியே சந்தித்தான். இளித்தப்படி நீட்டினான்.

மனம் குறுகுறுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்.

கைகள் நடுங்கிய படி வாங்கினேன்.

'தப்பில்லை' என்றான். சிரித்தேன்.

என் பைக்குள்ளே ஒளிந்தது -

நான்முதன்முதலாக வாங்கிய லஞ்சம்.

ஒரு நொடி க(வி)தை

முகஜாடை அவர் போல,


கைகால்கள் குட்டையாய் என் போல,


பாட்டியின் புடவையில் சுற்றி,
கன்னத்தில் மைவைத்திருந்தேன்.


குப்பைத் தொட்டியில் உறங்கும் என் மகன் அழகாய் இருந்தான்.