வீட்டின் நிலவரம், பிள்ளைப் பெற்ற மதிப்பெண்,
அம்மாவின் உடல்நிலை, அவள் முதலாளியின் கெடுபிடி
அனைத்தையும் விசாரிக்க ஆசை உண்டு.
நேரம் இல்லை.
திரளின் நடுவே அவள் முன்வந்தபோது வினவினேன்.
'நல்லா இருக்கியா?'
பதிலாக கிடைத்தது கண்ணீர்.
எங்கோ உள்ளிருந்து எட்டிப் பார்த்தது அவள் கோபம்.
கைதானது நான்.
தண்டனை அவளுக்கு.
2 comments:
எழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன் திருவடி அடைந்தார்.
அவரது கதைகளில் என்றென்றும் நடமாடவிருக்கும் பெங்களூரில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடக்கவுள்ளது.
தேதி: 15 மார்ச் 2008
நேரம்: மாலை 5 - 6
இடம்: பெங்களூர் கப்பன் பார்க் (ராணி விக்டோரியா சிலையின் இடதுபக்கத்துப் பார்க்கில். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு நேர் எதிரில்.)
மேலதிகத் தகவல்களுக்கு:
இமெயில்: bliss192@gmail.com
செல்பேசி: 9980141768
This poem shows so much emotions of pain in the heart
Post a Comment