ஒரு நொடி க(வி)தை

பார்த்தேன், சிரித்தேன்,

பக்கம் வர அழைத்தேன்.

இருபது நிமி்டம், இருநூறு ரூபாய்.

காரியத்தை முடித்தேன்.

ஒரு நொடி க(வி)தை - வாழ்க்கைச்சக்கரம்

பிள்ளை எட்டி உதைத்தான்.

பாசமாய் சிரித்தாள்.

அன்புடன் சுமந்தாள்.

பெற்றெடுத்தாள்.

வளர்த்தாள்.

முதிர்ந்தாள்.

பாரமானாள்.

மீண்டும், பிள்ளை எட்டி உதைத்தான்

ஒரு நொடி க(வி)தை

ஓசியில் பசியாற்றிய நன்பன் மகளின் பிறந்தநாள்.

கடன்பட்டு, பொம்மை பரிசளித்தேன்.

அவன் மனைவி புன்னகைத்தாள்.

ஒரு நாள் தேவை எழ, அங்கே சென்றேன்.

கை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம் வாசலில் உருண்டது.

ஒரு நொடி க(வி)தை

தள்ளி நின்று மேலும் கீழும் பார்த்தாள்.

புகைப்படம் எடுத்தாள்.

பையில் கைவிட்டு தேடி பிச்சையிட்டாள்.

பச்சை நிறத்தில் ஒன்றென்று அச்சடித்த தாள்.

செல்லா காசிட்டவளை திட்டிவிட்டு நகர்ந்தான் அவன்.

ஒரு நொடி க(வி)தை

மூன்று மாநிலங்களின் காவல் படை,

சுமார் ஆராயிரம் பரப்பளவு உள்ள காட்டில்,

இருபதாண்டுகள் மேல் தேடி,

நூறு பேரை கொன்று குவித்த 'ஒரு' ஆளைப் பிடித்தது.

சுவீட் எடு, கொண்டாடு!

ஒரு நொடி க(வி)தை


விளையாட்டாய் வீதியில் கோலமி்ட்ட குழந்தை விபத்தில் சிக்கி உயிர் நீத்தது.


வெகு நாட்களுக்கு வெறிச்சொடியது வாசல்.


கண்ணனின் கால்களில்லை, கார்த்திகை தீபமி்ல்லை.


கோல புத்தகம் இப்போது குப்பைத்தொட்டியில்.

ஒரு நொடி க(வி)தை

என்றோ பெய்த மழையில் சிலையாய் நனைந்தேன்.

காகித கப்பல் ஒன்று என் காலருகே தரை தட்டியது, ரசித்தேன்.

ஏதோ நினைத்தவளாய், மி்ன்னல் வேகத்தில் உள்ளிருந்து திரும்பினேன்.

கையில் இரு குடங்கள்.

ஒரு நொடி க(வி)தை

பூவில் வீழ்ந்த ஒளிக்கதிர் சிதறி, என் விழி மீது படர்ந்தது.

பார்க்கும் திறனற்ற கருங்குழிகள் இரண்டும் ஒளியை உள்ளிழுத்தது.

விளைவு - என் கைத்தடியால் நேர்ந்தது ஒரு பூவின் மரணம்.

ஒரு நொடி க(வி)தை


இன்று 'தல' படம் ரிலீசு.

பேருந்து நெரிசலில் சிக்கி தவித்த குடிமகன் திரையரங்கம் வர காத்திருந்தான்.

ரசிகர் பேரணி தரையிரங்க, இழந்த அரியாசனம் மீண்டது.

ஜன்னலோர சீட்.