காதல் கைகூட நெய்விளக்கு ஏற்றினேன்.
பிரகாரம் சுற்றி வரும் போது கண்களில் தென்பட்டது என் காதலனின் வேண்டுதல்.
கோவில் சுவற்றில் வரையப்பட்ட ஒரு இதயம்.
உள்ளே எங்கள் இருவரின் பெயர்கள்.
தேய்பிறையா வளர்பிறையா?
நட்சத்திரங்கள் நகர்ந்தனவா?
தெரியவில்லை...
அருந்ததியை தேடித் தலைத் திருப்பினேன்.
தண்டவாளத்தின் தகடு தலையில் இடித்தது.
மனம் குறுகுறுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்.
கைகள் நடுங்கிய படி வாங்கினேன்.
'தப்பில்லை' என்றான். சிரித்தேன்.
என் பைக்குள்ளே ஒளிந்தது -
பக்கம் வர அழைத்தேன்.
இருபது நிமி்டம், இருநூறு ரூபாய்.
காரியத்தை முடித்தேன்.
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து... இந்த தளத்தில் நிறைந்தது. உங்கள் கருத்துக்களை விட்டுச் செல்க!